வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை : நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள்

भाषा चयन करे

10th December, 2015

வெள்ளம் வந்த பின் எடுக்கவேண்டிய நோய் தடுப்பு நடவடிக்கைகள் | Preventive Measures for Disease after Floodசென்னையின் நிலைமை:(வெள்ளம் வந்த பின்னர்)

சென்னையில் வெள்ளததால் பாலங்கள், கழிவுநீர் அமைப்புகள், சாலைகள், கால்வாய்கள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன.

Image Source
 • அடிப்படையான பால், காய்கறிகள், தண்ணீர் போன்ற அத்தியாவசியமான பொருட்களின் தட்டுப்பாடு மிகுதியாக இருக்கிறது.
 • இது மட்டுமில்லாமல் கடுமையான தண்ணீர் மாசுபாடு இழப்பும் ஏற்பட்டுள்ளது.
 • வெள்ள நீர், கழிவு நீருடன் இணைந்து சுத்தமான தன்ணீர்ருடன் சேர்ந்து பல நீரின் மூலம் பரவும் நோய்களைப் பரப்புகிறது.
 • அதில் சிலவற்றை இங்கு காண்போம்:

திசையன் நோய்கள் (ஒரு கொசு அல்லது பூச்சி மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய்கள்).

 1. மலேரியா
 2. மஞ்சள் காய்ச்சல்
 3. யானைக்கால் நோய்
 4. டெங்கு
 5. சிக்கன்குனியா காய்ச்சல்
 6. ஜப்பனீஸ் மூளையழற்சி

தடுப்பு நடவடிக்கைகள்:

 • முறையான கழிவு அகற்றல்
 • குழிகள் மற்றும் வடிக்கால்களை மூடுவதன் மூலம் தண்ணீர் தேங்குவதை தவிர்தல்
 • எதிர்ப்பு லார்வா நடவடிக்கைககள்: மண்ணெண்ணெய், எண்ணெய், செயற்கை பூச்சிக்கொல்லிகள், டி.டி.டீ, மைக்ரோ படிகத்தூள்கள் முட்டைப் புழுக்களை உண்டாக்குகிற மீன்களை இனபெருக்கம் செய்தல் போன்றவற்றை பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயன்படுத்துதல்.
 • மலேரியா நோய் தடுப்பு: உள்ளரங்கு போன்ற இடங்களில் பூச்சிக்கொல்லி தெளித்தல், தெளிப்பான் பயன்படுத்துதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது, கொசுவின்  உற்பத்தியை பெருமளவுகுறைக்கும்.

நீர் மூலம் பரவும் நோய்கள் (அசுத்தமான தண்ணீர் உட்கொள்ளுதல் மூலம் ஏற்படுத்தும் நோய்கள்)

 1. டைபாய்டு
 2. ஜியார்டியா
 3. க்ரிப்டோஸ்போரிடியம்
 4. ஹெபடைடிஸ் A மற்றும் E
 5. காலரா மற்றும் பல நோய்கள் வெள்ள இடத்தை பொறுத்து அதிக விளைவுகளை ஏற்படுத்தும்.

தடுப்பு நடவடிக்கைகள்:

நீரில் குளோரின் கலப்பது: குளோரின், தண்ணீரை சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் நீரின்மூலம் பரவும் நோய்களை தடுப்பதோடு பாதுகாப்பான குடிநீரும் கிடைக்கும். குளோரின், பொதுவாக குடல் நோயை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் வைய்ரஸை  செயலற்றதாக்குகிறது. பின்பு கொதிக்க வைக்கப்பட்ட நீரை பருகுவது .

ஹெபடைடிஸ் A(கல்லீரல் வீக்கம்) தடுப்பூசி: தீவிரமான மஞ்சள் காமாலை நோய் HAV IgM antibodies மூலம் உறுதி செய்யப்படுகிறது. இந்த தடுப்பூசி குடிநீர் மேலாண்மை மற்றும் கழிவு நீர் தொடர்புடைய நபர்களுக்கு பெரும்பாலும் பரிந்துறைக்கப்படுகிறது. மலேரியா பாதிப்பை ஆரம்ப கட்டங்களிலேயே தடுக்க வாராந்திர ஆய்வு (Weekly Test) எடுப்பது மிக சிறந்தது அல்லது இலவச சுகாதார சேவைகளை நாடுவது மிகவும் சிறந்தது.

மலேரியா ஆரம்ப நோய் கண்டறிதல்(காய்ச்சல் ஏற்பட்ட 24 மணி நேரத்திற்குள்) சிகிச்சை பெறுதல் போன்றவைஇன்றியமையாத முக்கியத்துவம் வகிக்கின்றன.

ஹெல்த் சேத்து (Healthsetu) – என்னும் ஆன்லைன் சுகாதார வலைதளம் தமிழ் மக்களுக்காக முன்மாதிரி முயற்சிகளை எடுத்துள்ளது. இந்த நிறுவனம் எல்லா வட்டார மொழிகள் பேசும் மக்களுக்கும் இலவச ஆலோசனை வழங்க உள்ளது.
வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்க Healthsetu  -( சுகாதார வலைதளம்) முன்வந்துள்ளது.

ஆகையால் இலவச மருத்துவ ஆலோசனை எடுக்க விரும்பும் மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசிஎண் : 080-39512654.अधिक जानकारी के लिए क्लिक करे !

अधिक जानकारी के लिए क्लिक करे !